TNPSC Group1 Mains Tamil Society and its Culture Mains Question Bank

TNPSC Group1 Mains Tamil Society and its Culture Mains Question Bank

 

1.”வளம் காணும் தமிழகம்” எனும் கூற்றினை ஆராய்க.

2. இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வளர்ச்சியினை விவரி.

3. திருமுருகாற்றுப்படை குறிப்பிடும் குன்று தோறாடல் விளக்குக.

4.இண்டைமாலை – குறிப்பு வரைக.

5.அயல்நாடுகளில் தமிழ் வளர்ச்சி குறித்து எழுதுக.

6.சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் தம் பாடல்கள் வழி வெளிப்படுத்தியோர் யாவர்?

7.சைவ, வைணவ நெறிகளுக்கு இடையிலான இரண்டு கருத்தாக்க வேறுபாடுகளை எழுதுக.

8.இந்திர விழா – விளக்கம் தருக.

9.செப்பேடுகள் – குறிப்பு வரைக.

10.சைவ சமயம் குறிப்பிடும் ஐந்தவத்தைகள் யாவை?

11.’சித்திரகாரப் புலி’ – குறிப்பு வரைக.

12.’குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை ‘ என்பதை பற்றி குறிப்பு வரைக.

13.சுதந்திரத்துக்குப் பின்பு தமிழகத்தில் கல்வி வளர்ச்சி என்பது குறித்துக் கட்டுரை வரைக.

14. பழந்தமிழர் நம்பிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறுக.

15.நாகரீகம், பண்பாடு என்ற சொற்களை விளக்கு.

16.தமிழ்ப் பெண்டிர் பண்பாடாக நீவிர் அறிவன யாது?

17.’வாள்போழ்ந்து அடக்கல்’ என்ற தொடர் கூறும் கருத்து யாது?

18.சிலம்பாட்டம் – குறித்து விளக்குக.

19.”கள வேள்வி’ என்பதன் பொருள் யாது? இதன் மூலம் நீர் அறியும் செய்தி யாது?

20.தொல்காப்பியம் காட்டும் நானில தெய்வங்கள் – குறிப்பு வரைக.

21.முதுமக்கள் தாழி பற்றி எழுதுக.

22.நீதி நூல்களில் மருத்துவச் செய்திகள் குறித்து நீவிர் அறிவது யாது?

23.குடைவரைக் கோயில்கள் – குறிப்பு வரைக.

24.கீர்த்தனை என்றால் என்ன? புகழ் பெற்ற கீர்த்தனை ஆசிரியர்கள் சிலரைக் கூறுக.

25.தமிழர் கண்ட நல்லறம் குறித்து விவரி.

26.சங்க இலக்கியங்கள் தரும் மருத்துவக் குறிப்புகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

27.மூதில் முல்லை , ஏறாண் முல்லைத் துறைகள் புலப்படுத்தும் மறக்குர மகளிர்தம் வீரவுணர்வைக் கூறுக.

28.’பாறைக் கோயில்கள்’ – குறிப்பு வரைக.

29.’அறன் வலியுறுத்தல்’ அதிகாரம் உணர்த்தும் கருத்துக்களை விவரி.

30.”சிலம்புகழி நோன்பு” – குறிப்பு வரைக.

31.இராமானுஜர் குறிப்பு வரைக.

32.வெறியாட்டு என்பது என்ன?

33.கூத்து நூல்கள் பற்றி எழுதுக.

34.கல் சிற்ப வேலைப்பாடு  குறிப்பெழுதுக.

35.தெருக்கூத்தின் சிறப்பு பற்றி எழுதுக.

36.வைக்கம் போராட்டம்  குறிப்பு வரைக.

37.சங்ககால தமிழர் திருமண முறை குறித்து விளக்கிக் கட்டுரை வரைக.

38.தமிழகக் கோயிற் கட்டடக்கலையும், அதன் வளர்ச்சியும் குறித்து எழுதுக.

39.பண்டைத் தமிழரின் திருமணச் சடங்குகள் குறித்து எழுதுக.

40.முச்சங்கங்கள் பற்றி எழுதுக.

41.ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயம் குறித்து விளக்குக.

42.ஆகமங்கள் என்றால் என்ன?

43.ஏழிசைகளின் தமிழ்ப்பெயர்களைச் சுட்டுக. ஏழிசைகளின் அடியாகத் தோன்றிய பண்கள் எத்தனை?

44.சிலப்பதிகாரம் குறிப்பிடும் நாடக மேடை அமைப்பு பற்றி விளக்குக.

45.வடகலைக்கும், தென்கலைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

46.நடுகல் வழிபாடு – குறிப்பெழுதுக.

47.’காவல் மரம்’ குறித்து எழுதுக

48.யாழ் எத்தனை வகைப்படும்? அவை யாவை? நரம்புகள் எத்தனை?

49.மதுரை நாயக்கர்களின் கலை, கட்டுமான, இலக்கிய, சமயப்பணிகளை ஆராய்க.

50.மகாண மறுசீரமைப்புக்கான காரணங்களை ஆராய்ந்து அதனால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களை விவரி.

51.”சங்க காலத்தை தமிழகத்தின் பொற்காலம்” என்ற கூற்றை ஆராய்க.

52.பல்லவர்களின் ஆட்சிமுறை குறித்து ஒரு கட்டுரை வரைக.

53.ராஜராஜ சோழரின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை விவரி.

54.பக்தி இயக்கம் எவ்வாறு தமிழ்மொழி மற்றும் சமய வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது?

 

TNPSC Group1 Mains Tamil Society and its Culture Mains Previous Year Question Paper Analysis:

 

Topic – Tamil Society: Origin and Expansion

 

1) Bring out the Devadasi System in tamil society during the medieval period.

2) Write about the Social reform movement which took place in the Travancore state

3) How far other disciplines help to understand the history of Tamil Society?

4) What are the truths known by the Seppedu?

5) What are all the historical information obtained through fold literatures?

6) What are the prehistoric news about Tamilnadu?

7) Write a short note on ‘walking on embers’ ritual.

8) Write the salient features of the people who live in ‘Mullai’ land.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *