TNPSC Group1 Mains Indian Polity Question Bank Part 2

TNPSC Group1 Mains Indian Polity Question Bank Part 2

 

1. இந்தியாவில் பாராளுமன்ற மக்களாட்சி செயல்படும் விதத்தினையும் மதிப்பீடு செய்க.

2. மத்திய மாநில உறவுகள் பற்றி சர்க்காரியா கமிஷன் கூறிய பரிந்துரைகள் என்னவென்று மதிப்பீடு செய்க.

3. இந்திய அரசியலமைப்பு வடிவத்தால் கூட்டரசு, ஆனால் விளைவினால் ஒன்றிய அரசு விவரித்து எழுதுக.

4. அடிப்படை சட்டத்தில் பெண்களுக்கு ஒதுக்கீடு அளிப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் பற்றி விவரித்து எழுதுக.

5. இந்திய பாராளுமன்ற அமைப்பு வெற்றிகரமாக செயல்படுவது பாராளுமன்ற குழுக்களின் செயல்பாட்டினை சார்ந்துள்ளது விளக்குக.

6. ஒரு மக்களாட்சி நாடு வெற்றிகரமாக செயல்பட தேவையான நிபந்தனைகள் யாவை?

7. இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் பணி செய்யும் முறை பற்றி விவரித்து எழுதுக.

8. இந்தியாவில் மாநில ஆளுநர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்? அந்நியமனம் முறை அவர் சுதந்திரமாக செயல்படுவதற்கு அனுமதிக்கிறதா,

9. இந்திய அரசியலமைப்பில் சிறுபான்மையினர் என்ற கொள்கையை ஆராய்ந்து, அச்சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்டுள்ள வழிவகைகளை எடுத்துக்காட்டுக.

10. பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றும் முறையை விளக்குக.

11. பண்டிட் ஜவகர்லால் நேரு இந்திய மக்களாட்சியை உருவாக்கியவர் ஆராய்க.

12. அடிப்படை உரிமைகளை வழிகாட்டு நெறிக் கொள்கைகளிலிருந்து எவ்வாறு பிரிப்பாய்.

13. அடிப்படை உரிமைகளுக்கும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கும் உள்ள வேறுபாட்டை கூறுக. எந்த அளவிற்கு வழிகாட்டி நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன?

14. மாநில ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவாதி.

15. உச்சநீதிமன்ற அதிகாரத்தின் மீது 42வது அரசியல் திருத்தம் ஏற்படுத்திய தாக்கம் யாவை?

16. அடிப்படை உரிமைகளின் தன்மையையும் அதன் நோக்கங்களையும் ஆராய்க.

17. இந்தியாவில் அழுத்த குழுக்களின் பங்கினை விவரித்து எழுதுக.

18. பல்வந்த்ராய் மேத்தா கமிட்டியின் செயல்பாடுகள் மற்றும் பரிந்துரைகளை விவரிக்க.

19. காவிரி நதிநீர் பிரச்சனையின் அரசியல் பின்னணியை விவரித்து எழுதுக.

20. இந்தியாவில் மத்திய ,மாநில உறவின் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்க.

21. நமது இந்திய அரசியல் அமைப்பின் முக்கிய அம்சங்களை விளக்குக.

22. இந்திய தேர்தல் ஆணையத்தின் அமைப்பு, அதிகாரம் மற்றும் பணிகளை விவரி.

23. மாநில அரசில் ஆளுநரின் பங்கினை விளக்குக.

24. அரசியலமைப்பில் தரப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளை வரையறுத்து எழுதுக.

25. தேர்தல் ஆணையாளரின் பணிகளை குறிப்பிடுக.

26. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் முக்கியத்துவத்தை விவரித்து எழுதுக.

27. நாடாளுமன்ற மக்களாட்சியின் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்க.

28. இந்திய பிரதம அமைச்சரின் கடமைகள் பற்றியும் அவருடைய அதிகாரங்களையும் மற்றும் பணிகளையும் ஆராய்க.

29. இந்தியாவில் பிராந்திய அரசியல் கட்சிகள் உருவாவதற்கான காரணங்களை ஆராய்க.

30. ஆட்கொணர்வு நீதிப்பேராணை மற்றும் கட்டளை நீதிப்பேராணை பற்றி விவரித்து எழுதுக.

31. காவிரி நதிநீர் சிக்கல் குறித்த செய்திகளை விரிவாக எழுதுக.

32. அரசின் வழிகாட்டும் கோட்பாடுகள் பற்றி விளக்கி, இக் கோட்பாடுகளுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி ஆராய்க.

33. தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விளக்குக.

34. ஒரு மாநிலத்தின் தலைமை செயலகத்தின் செயல்பாடுகள் குறித்து விவரித்து எழுதுக.

35. மாவட்ட நிர்வாகம் பற்றியும் அதன் அமைப்பு குறித்தும், அதன் பணிகளையும் விவரித்து விளக்குக.

36. இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் வளர்ச்சியை ஆராய்க.

37. இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக.

38. மாவட்ட ஆட்சியரின் செயல்பாடுகள் பற்றி விளக்குக.

39.1935 ஆம் ஆண்டு இந்திய சட்டம் பற்றி விவரித்து எழுதுக.

40. இந்தியாவில் மின் ஆளுகை குறித்தும் அதன் முயற்சிகளைப் பற்றியும் விளக்குக.

41. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் 1989 விளைவுகளை விளக்குக.

42. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிலையைப் பற்றி விளக்குக.

43. இந்திய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அரசியல் நிர்ணய சபையின் பங்களிப்பு பற்றி விளக்குக.

44. ஐக்கிய நாடுகள் சபையின் மறுசீரமைப்பின் தேவையைப் பற்றி ஆராய்க.

45. இந்திய குடியரசுத் தலைவரின் தேர்வு முறை பற்றி கூறி, அவரை பதவி நீக்கம் செய்ய முடியுமா? என்பதையும் விளக்குக.

46. அரசியல் அமைப்பில் சட்ட திருத்தம் செய்யும் முறையை பற்றி விவரித்து எழுதுக.

47. சட்டமன்ற மேலவை மற்றும் கீழவை குறித்து சிறு குறிப்பு தருக.

48. மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட இந்திய நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் நீதிப் பேராணைகள் (Writs) பற்றி விளக்குக.

49. மாநில ஆளுநரின் மன்னிக்கும் அதிகாரங்கள் பற்றி விவரித்து எழுதுக.

50. ஒரு மாநிலத்தின் மாநில அரசின் ஆளுநர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதனையும்,அவருடைய அதிகாரங்களையும் பற்றி விவரி.

51. இந்திய அரசியலமைப்பின் நான்காம் பாகத்தில் அடங்கியுள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி விவரிக்க.

52. தமிழ்நாட்டில் நீதிமன்ற நிர்வாக முறையை பற்றி விளக்குக.

53. தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சியைப் பற்றி விளக்குக.

54. மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர் பற்றியும் அவரது பங்கினை பற்றியும் விளக்குக.

55. இந்திய அரசியலமைப்பின் ஏழாவது பட்டியல் பற்றி விவரிக்கவும்.

56. இந்திய அரசியல் சாசனம் விதித்துள்ள அடிப்படை கடமைகள் பற்றி ஆராய்க.

57. மாநில முதலமைச்சரின் கடமைகள் மற்றும் அவரின் பணிகள் மற்றும் அதிகாரங்களை விளக்குக.

58. மாநில திட்டக்குழுவின் அமைப்பு மற்றும் அதன் பணிகள் பற்றி விவரித்து எழுதுக.

59. இந்திய அரசியல் சாசனத்தின் அங்கம் 163 – இன் படி மாநிலத்தின் முதலமைச்சர் செயல்படுகிறார் என்பதை ஆராய்க.

60. மாநில உயர்நீதிமன்றத்தின் அமைப்பு குறித்தும் அதன் அதிகாரங்கள் குறித்தும் விளக்குக.

61. “இந்திய அரசியலமைப்பின் அடிப்படையில் இந்தியாவில் சிறுபான்மையினரின் நலன்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன” என்ற கூற்றை ஆராய்க.

62. மாநில தேர்தல் ஆணையத்தின் நோக்கம் பற்றியும், அதன் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடு குறித்து விளக்குக.

63. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் தோற்றம் பற்றி விவரித்து எழுதுக.

64. இந்திய அரசியலில் வட்டார கட்சிகள் தற்போது பெற்றுள்ள முக்கியத்துவத்தை விளக்குக.

65. கேபினட் அல்லது அமைச்சரவை குழு என்பது என்ன? அதன் செயல்பாடுகளை விவரி.

66. (அ) பாராளுமன்ற சபாநாயகர் தேர்வு முறை பற்றி விளக்குக.

(ஆ) இந்திய அரசியலமைப்பின்படி சொத்துரிமையின் நிலை என்ன?

67. இந்திய அரசியலமைப்பின்படி மாநில சட்டமன்றத்தின் உருவாக்கம், சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதிகள், சபாநாயகரின் தேர்வுமுறை, சட்டமன்றத்தின் அதிகாரங்கள் பற்றி விவரி.

68. மாநில அரசு பணி தேர்வாணையத்தின் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளை விளக்கி வரைக.

69. (அ) சட்டத்திருத்தம் 42 மற்றும் 44 பற்றி கூறுக.

(ஆ) இந்திய அரசியலமைப்பு சபை உருவாக்கம் பற்றி விவரிக்கவும்.

70. சட்டமன்ற மேலவையின் அமைப்பு, செயல்பாடுகளை இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் விளக்கி எழுதுக.

71. இந்திய அரசியலமைப்பின் 12ஆம் பாகத்தில் குறிப்பிட்டுள்ள அரசியல் சாசன சட்ட திருத்தங்களை குறிப்பிட்டு முக்கியத்துவம் வாய்ந்த சட்ட திருத்தங்களை பட்டியலிடுக.

72. நாடாளுமன்ற மக்களாட்சியின் முக்கியத்துவத்தை விளக்குக.

73. இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் எழுத்தறிவு பற்றி ஆராய்க.

74. மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவரின் அதிகாரங்களை விவரிக்க.

75. மாநிலத்தில் அமைச்சரவைக் குழுவின் பணிகளையும் மற்றும் அதன் பொறுப்புகளையும் விளக்குக.

 

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *