TNPSC GROUP1 MAINS ECONOMY QUESTION PAPER AND QUESTION BANK

TNPSC GROUP1 MAINS ECONOMY QUESTION PAPER AND QUESTION BANK

 

1. இந்திய பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் நன்மை தீமைகள் யாவை?

2. இந்தியாவின் தீவிர வேளாண் உற்பத்தி வளர்ச்சி திட்டத்தின் பிரதான அம்சங்களை விளக்குக.

Explain the salient features of ‘intensive Agriculture Development Programme’ in India.

3. இந்திய நிதிக் குழுவின் அமைப்பு மற்றும் பணிகளை விவரி.

Explain the organisation and functions of finance commission of India.

4. மூலதன உருவாக்கம் என்றால் என்ன ? மொத்த மூலதன உருவாக்கம் மற்றும் நிகர மூலதன உருவாக்கம் வேறுபடுத்துக.

What is meant by capital formation? distinguish between Gross Capital Formation and Net Capital Formation.

5. உலக நிதி சிக்கலின் பொழுது, இந்தியாவில் என்ன நிகழவில்லை?

What has not happened in India during global financial crisis?

6.80வது அரசியல் மாற்றியமைப்பு சட்டம் நிதி குழுவில் ஏற்படுத்திய விளைவுகள் யாவை?

What are the effects of 80th Amendment Act of the Constitution on finance Commission?

7. கிராமப்புற வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மையின் உறவினை பற்றி விவாதிக்கவும்.

Discuss the relationship of rural poverty and unemployment.

8. வரிவிதிப்பின் விதிகளை பற்றி விளக்கவும்.

Explain the canons of taxation.

9. இந்திய நிதி கொள்கையின் நோக்கங்கள் யாவை?

What are the objectives of india monetary policy?

10. லாபத்தை ஈட்டித்தரும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட வேண்டுமா அல்லது நட்டத்தை தரும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட வேண்டுமா ஏன் என்பதை விவரிக்கவும்?

Should profit making PSU’s Privatised or loss making PSU’s be Privatised.Why?

11. இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்புகள் சிலவற்றை விவாதிக்கவும்.

Discuss some of the digital in India initiatives of India

12.பொருளாதாரத்தின் வளர்ச்சியில் போக்குவரத்தின் பங்கினை விளக்குக.

Provide the role of transportation in the development of economy

13.எந்தவொரு பொருளாதாரமும் வளர மக்கள்தொகைப் பரவலைப் பற்றிய விவரம் அவசியமாகும் (அதே போன்று நேர்மாறாக) என்பதனை விளக்கவும்.

Demographic profile is essential for any economy to develop and vice versa.
Explain

14.எவ்வாறு இந்தியா அதன் அந்நிய வர்த்தகத்தை விரிவாக்கலாம்?

How can India expand its foreign trade? What should be done to expand the export share of India?

15.பொது விநியோக முறை இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு உணவு பாதுகாப்பின் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது (வறுமைக் கோட்டிற்கு கீழ்) என்பதை நிரூபிக்கவும்.

The Public Distribution System has been an important source of food security to the Indian working class (below poverty line).Justify

16.தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் சிலவற்றை விவாதிக்கவும்

Discuss some of the welfare schemes of Tamil Nadu.

17.இந்தியாவில் வங்கிகள் தேசியமயமாக்கப் பெற்றதின் தாக்கத்தினை ஆராய்க.

18.புதிய பொருளதாரக் கொள்கையின் மூலம் ரஷ்யா அடைந்த முன்னேற்றங்களை
மதிப்பிடுக.

19.இரண்டாவது உலகப் போருக்கு முன்னர் ரஷ்யாவில் நிலவிய அரசியல், சமூக,பொருளாதார நிலையினை குறிப்பிடுக.

20.NABARD- என்பதனை விவரி.

21.பன்னாட்டு மயமாக்கப்படுதல் என்பதனை வரையறு.

22.இந்தியாவில் கூட்டுறவு அங்காடிகளின் வளர்ச்சியைத் திறனாய்வு செய்க.

23.மையத் திட்டமுறை, பகிர்ந்து அளிக்கப்பட்ட திட்ட முறை என்றால் என்ன? உங்களுக்கு ஏற்புடையது எது? ஏன்?

24.வணிக சமநிலையையும் செலுத்து சமநிலைமையையும் வேறுபடுத்திக் காண்க.

25.இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கைகளை ஆராய்க.

26.இந்தியாவில் பொது வழங்குமுறைத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்று ஆராய்க.

27.தொழில் துறையில் உயிரியல் தொழில் நுட்பத்தின் பங்கை விளக்கு.

28.அறிவியல், தொழிற்சாலை, சமுதாயம்-ஆகியவற்றில் மின்னவியலின் தாக்கம் பற்றி விவரி.

29.நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குடிசைத் தொழில்களின் முக்கியத்துவம் யாது?

30.தமிழ்நாட்டில் பசுமைப் புரட்சியின் விளைவுகளை விளக்குக.

31.கம்ப்யூட்டர் மயமாக்கல் இல்லை எனில் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் எப்படி இருக்கும்?

32.இந்தியச் சூழ்நிலையில் அறிவியல் வல்லுநர்களின் சமுதாயக் கடமை குறித்து விவரி. திறமையாளர்களின் வெளியேற்றத்துக்கான காரணங்களையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் குறித்து ஆய்வு செய்க. அதைத் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அறிவுறுத்துக.

33.தமிழ் நாட்டில் திட்ட காலத்தில் கூட்டுறவுத்துறை தொழில் வளர்ச்சியை ஆராய்க.

34.தமிழ் நாட்டில் காற்று திறன் வளர்ச்சிக்கு தனியார் முதலீட்டுக்கான தேவையை கூறுக.

35.இந்தியாவின் மக்கட்தொகைப் பரவல் ஒரே சீராக இல்லாமைக்கு காரணம் யாவை?

36.இந்திய விவசாயத் தொழிலாளர்களின் இயல்புகள் யாவை?

37.பெரு நகரங்களில் குடிசைப் பகுதிகள் எவ்வாறு அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்பதனை விளக்குக.

38. சமீபத்திய தாராளமயமாக்கப்பட்ட கொள்கைகள் இந்திய பொருளாதாரத்தை மாற்றியுள்ள விதத்தினை ஆராய்க.

39. பன்னாட்டு பண நிதியின் முக்கிய நோக்கங்கள் யாவை?

40. பொது செலவு என்றால் என்ன? இந்தியாவில் ஏன் பொது செலவு அதிகரித்துக் கொண்டு செல்கிறது. விவரிக்க.

41. மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்த அரசு அண்மைக்காலத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ஆராய்க.

42. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சமூக நலத் திட்டங்கள் பற்றி குறிப்பிடுக.

43. இந்திய தேசிய வருமானத்தை கணக்கிடுவதில் உள்ள பல்வேறு முறைகள் பற்றி விளக்குக.

44. இந்திய கலப்பு பொருளாதாரத்தின் இயல்புகளை விவரிக்கவும்.

45. இந்திய பொருளியலின் அடிப்படை பிரச்சினைகளை விளக்குக.

46. விவசாயம் பொருளாதார மேம்பாட்டை எவ்வாறு கட்டுப்படுத்தும் அல்லது வளர வழி செய்யும் என்று விவாதிக்கவும்.

47. பண பரிமாற்றம் என்றால் என்ன? அது இந்திய பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது?

What is Money Laundering? How does it impact Indian economy?

48.ஐ.பி.ஆர். கொள்கை என்றால் என்ன? பொருளாதார வளர்ச்சிக்கு இது எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?

What is IPR policy? How it will be useful for an economic growth?

49.நிரத்பாந்து திட்டம் என்றால் என்ன? அதன் நோக்கங்களைக் குறிப்பிடுங்கள்.

What is NiryatBandhu scheme? Mention its objectives.

50.SARFAESI சட்டம் பற்றி விவரித்து எழுதுக.

51.வங்கிகளின் மறுமூல தன மயமாக்கல் என்றால் என்ன?

What does recapitalisation of banks mean?

52. சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் முக்கியத்துவத்தை விளக்குங்கள்.

Explain the importance of special economic zones

53. வறுமையை வரையறுக்கவும், வறுமை வகைகளைப் பற்றி எழுதவும்.

Define poverty, write about the types of poverty.

54. வாராக்கடன் என்றால் என்ன? வாராக்கடன் அதிகரிக்க காரணிகள் என்ன? அதன் தாக்கங்கள் என்ன?

What is a Non – Performing Asset (NPA)? What caused the increase in ‘NPA’ What are its impacts?

55. முதலீடுகளை திரும்பப் பெறுதல் என்றால் என்ன? முதலீடுகளை திரும்பப் பெற தேவை என்ன? அதன் நன்மைகள் மற்றும் குறைபாடுகளையும் எழுதுக.

What is disinvestment? what is the need for disinvestment? Bring out its merits and demerits.

56. நடப்பிலுள்ள தமிழக மாநில பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பற்றி விவரிக்கவும்.

57. இந்திய நிதிக் குழுவின் அமைப்பு மற்றும் பணிகளைப் பற்றி விவரிக்கவும்.

58. நிதி நிர்வாகத்தின் பொருள், தன்மை மற்றும் முக்கியத்துவத்தை விவாதி.

59. தமிழ்நாட்டின் வேளாண் ஏற்றுமதி மண்டலங்கள் பற்றி சிறுகுறிப்பு வரைக.

60. அரசு சாரா நிறுவனங்களின் பல்வேறு வகைகளை விவரித்து அவற்றின் செயல்பாட்டு முறையை ஆய்வு செய்க.

61. தமிழக தொழில் மேம்பாட்டில் SIPCOT அமைப்பின் பங்கினை மதிப்பிடுக.

62. தமிழ்நாட்டில் சர்க்கரை தொழிலின் நிலையினை மதிப்பீடு செய்க.

63. இந்தியாவில் சமூக நலத்திட்டங்களில் ஈடுபடும் நிலை, அரசு சாரா நிறுவனங்களின் நிலை, பங்கு மற்றும் பணிகளை விரிவாக விளக்கி எழுதுக.

64. தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை ஆய்வு செய்க.

65. தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் பற்றி சிறு கட்டுரை வரைக.

66. வங்கிகளில் வாராக்கடன் ஆல் ஏற்பட்ட விளைவுகளையும் அதற்கு ஆர்பிஐ மற்றும் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எழுதுக.

67. கல்விக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பை மதிப்பீடு செய்க.

68. தமிழ்நாடு தொழில் துறை முதலீட்டிற்கு சாதகமான வாய்ப்புகள் நிறைந்த மாநிலம் நிறுவுக.

TamilNadu is an industrial friendly state substantiate.

69. நிதி ஆயோக் என்றால் என்ன? அதன் நோக்கம், அமைப்பு மற்றும் பணிகள் குறித்து விவரித்து எழுதுக.

70. தமிழகத்தில் தொழில்துறை அமைவிடம் பற்றி விரிவாக விளக்குக.

71. தமிழ்நாடு அரசின் தொழில் கொள்கை மற்றும் அதன் அம்சங்களை விளக்குக.

72. இந்திய வரவு செலவு திட்டத்தின் தன்மைகளை பகுத்தாய்வு செய்க.

73. தமிழக மாநில நிதி ஆணையத்தின் அமைப்பு மற்றும் பணிகள் பற்றி விளக்குக.

74. வரவு செலவுத் திட்டத்தின் கொள்கைகள் யாவை?

75. தமிழ்நாட்டின் முக்கிய தொழில் மண்டலங்களை விவரிக்க.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *