South Indian History tnpsc test 4

South Indian History tnpsc test 4

தென்னிந்திய வரலாறு தேர்வு 4

 

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  South Indian History tnpsc test 4 கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 25 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

 

 

South Indian History tnpsc test 4

தென்னிந்திய வரலாறு தேர்வு 4

 

1.Match the following

A) Chera – 1. Fish
B) Chola – 2. Tiger
C) Pandya – 3. Bow and arrow

பொருத்துக

A) சேரர் – 1.மீன்
B) சோழர் – 2.புலி
C) பாண்டியர் – 3.வில், அம்பு

 

   A B C
a) 3 2 1
b) 1 2 3
c) 3 1 2
d) 2 1 3

Answer: a

 

2. The battle of Venni was won by ——–

a) Karikalan
b) Cheran Irumporai
c) Copperunchola
d) Cenkuttuva

வெண்ணி போரில் வெற்றி பெற்றது ——-

a) கரிகாலன்
b) சேரன் இரும்பொறை
c) கோப்பெருஞ்சோழன்
d) செங்குட்டுவன்

 

Answer: a

 

3. The earliest Tamil grammar work of the Sangam period was,

a) Nannul
b) Tantlyalankaram
c) Tholkappiyam
d) Agathiyam

சங்க காலத்து மிகப்பழமையான தமிழ் இலக்கண நூல்

a) நன்னூல்
b) தண்டியலங்காரம்
c) தொல்காப்பியம்
d) அகத்தியம்

Answer: c

 

4. ——– built Kallanai across the river Kaveri.

a) Paranthaga Chola
b) Killi Valavan
c) Raja Raja Chola
d) Karikalan

காவிரியாற்றின் குறுக்கே கல்லணையை ——– கட்டினார்.

a) பராந்தக சோழன்
b) கிள்ளி வளவன்
c) இராஜராஜ சோழன்
d) கரிகாலன்

Answer: d

 

5. The chief of the army was known as —–

a) Velir
b) Jana
c) Thanaithalaivan
d) Commander

படைத்தலைவர் —— என அழைக்கப்பட்டார்.

a) வேளிர்
b) ஜனா
c) தானைத் தலைவன்
d) சேனாதிபதி

Answer: c

 

6. Land revenue was called ——

a) Baga
b) Irai
c) Land Tax
d) Jiziya

நிலவரி ——- என அழைக்கப்பட்டது.

a) பாகா
b) இறை
c) நிலவரி
d) ஜிஸியா

Answer: b

 

7. Match the following

A) Thennar – 1. Cheras
B) Vanavar – 2. Cholas
C) Senni – 3. Velir
D) Adiyaman – 4. Pandyas

பொருத்துக

A) தென்னர் – 1.சேரர்
B) வானவர் – 2. சோழர்
C) சென்னி – 3. வேளிர்
D) அதியமான் – 4. பாண்டியர்

 

A B C D

a) 2 4 3 1
b) 4 2 1 3
c) 4 1 2 3
d) 2 3 4 1

Answer: c

 

8. Which inscription tells about the qualification of teachers who taught vedas and Grammar in the period of Rajaraja – 1 ?

a) Kambalur
b) Aniyur
c) Tribuvanam
d) Ennayiram

முதலாம் இராஜராஜன் காலத்தில் இலக்கணங்களையும் வேதங்களையும் கற்பிக்கும் ஆசிரியரின் தகுதிகளைக் கூறும் கல்வெட்டு

a) கம்பலூர்
b) அணியூர்
c) திரிபுவனம்
d) எண்ணாயிரம்

Answer: b

 

9. Which Inscription teaches us about the later pandyas

a) Uttiramerur
b) Vayalur
c) Mamandur
d) Tarasuram

பிற்காலப் பாண்டியர்கள் பற்றி அறிய உதவும் கல்வெட்டுச் சான்றுகள்

a) உத்திரமேரூர்
b) வயலூர்
c) மாமண்டூர்
d) தாராசுரம்

Answer: b

 

10.What was the name given to library during the pandya period?

a) Salabogam
b) Dharumasanam
c) Saraswati Pandaram
d) Patta viruthi

பாண்டியர் காலத்தில் நூலகத்திற்கு வழங்கப்பட்ட பெயர்

a) சாலபோகம்
b) தருமாசனம்
c) சரஸ்வதி பண்டாரம்
d) பட்ட விருத்தி

Answer: c

 

11.Match the following:

a) Chola Mandalam – 1.Kerala
b) Jeyangonda Chola Mandalam – 2. Srilanka
c) Mumudi chola Mandalam – 3.Trichy, Tanjore
d) Malai mandalam – 4. Thondai Nadu

பொருத்துக:

a) சோழ மண்டலம் – 1. கேரளா
b) ஜெயங்கொண்ட சோழ மண்டலம் – 2. இலங்கை
c) மும்முடி சோழ மண்டலம் – 3. திருச்சி, தஞ்சை
d) மலை மண்டலம் – 4. தொண்டை நாடு

 

   A B C D

a) 2 1 3 4
b) 3 2 4 1
c) 3 4 2 1
d) 1 4 2 3

Answer: c

 

12.Which Inscription talks about War victories and Army strength of Samudragupta -1 ?

a) Allahabad Pillar
b) Saranath
c) Aihole
d) Asoka Rock inscription

முதலாம் சமுத்திரகுப்தரின் போர் வெற்றிகள், படைத்திறன் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு

a) அலகாபாத் தூண்
b) சாரநாத்
c) ஐஹோலே
d) அசோகரின் பாறைக் கல்வெட்டு

Answer: a

 

13.Who among the following built the Vaikunda Perumal temple?

a) Narasimhavarma – 2
b) Nandivarma – 2
c) Nantivarman
d) Parameshvaravarma

கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப் பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?

a) இரண்டாம் நரசிம்மவர்மன்
b) இரண்டாம் நந்திவர்மன்
c) நந்திவர்மன்
d) பரமேஸ்வரவர்மன்

Answer: b

 

14. Which of the following titles were the titles of Mahendra Varma -1?

a) Mattavilasa
b) Vichitra Chitta
c) Gunabara
d) all the three

கீழ்க்காண்பனவற்றில் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட பட்டங்கள் யாவை?

a) மத்தவிலாசன்
b) விசித்திரசித்தன்
c) குணபாரன்
d) இவை மூன்றும்

Answer: d

 

15. Which of the following inscriptions describes the victories of Pulakesi-2?

a) Aihole
b) Saranath
c) Sanchi
d) Junagath

கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?

a) அய்கோல்
b) சாரநாத்
c) சாஞ்சி
d) ஜூனாகத்

Answer: a

 

16. Read the statement and tick the appropriate answer

Statement l: Pallava art shows transition from rockcut monolithic structure to stone built temple.

Statement II: Kailasanatha temple at Kanchipuram is an example of Pallava art and architecture.

a) Statement I is wrong.
b) Statement Il is wrong.
c) Both the statements are correct
d) Both the statements are wrong.

கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்துப் பொருத்தமான விடையை காண்க.

கூற்று I : பாறை குடைவரை கோவிலைச் செதுக்கும் முறையிலிருந்து, கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டும் மாற்றம் ஏற்பட்டதை பல்லவர் கலை உணர்த்துகிறது.

கூற்று II: காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் பல்லவர்களின் கலை மற்றும் கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

a) கூற்று I தவறு
b) கூற்று II தவறு
c) இரு கூற்றுகளும் சரி
d) இரு கூற்றுகளும் தவறு

Answer: c

 

17.Consider the following statements about Pallava Kingdom.

Statement l: Tamil literature flourished under Pallava rule, with the rise in popularity of Thevaram composed by Appar.

Statement II: Pallava King Mahendravarman was the author of the play Mattavilasa Prahasana.

a) I only
b) II only
c) Both I and II
d) Neither I nor II

பல்லவ அரசினைப் பற்றிய கூற்றுகளைச் சிந்திக்கவும்.

கூற்று I : இவர்களுடைய ஆட்சியில் அப்பரால் இயற்றப்பட்ட தேவாரம் முதல் மற்ற தமிழ் இலக்கியங்களும் செழித்தோங்கின.

கூற்று II : முதலாம் மகேந்திரவர்மன் மத்த விலாச பிரகசனம் எனும் நூலின் ஆசிரியர் ஆவார்.

a) கூற்று I மட்டும் சரி
b) கூற்று II மட்டும் சரி
c) இரு கூற்றுகளும் சரி
d) இரு கூற்றுகளும் தவறு

Answer: c

 

18. Consider the following statements about the Rashtrakuta dynasty and find out which of the following statements are correct.

1. It was founded by Dantidurga.
2. Amogavarsha wrote Kavirajmarga.
3. Krishna -1 built the Kailasanatha temple at Ellora.

a) 1 only
b) 2 and 3
c) 1 and 3
d) all the three

ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்தித்து அவற்றில் எவை சரியான கூற்றென்று கண்டறியவும்.

1. இவ்வம்சத்தை நிறுவியவர் தந்தி துர்கா
2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்.
3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.

a) 1 மட்டும் சரி
b) 2, 3 சரி
c) 1, 3 சரி
d) மூன்றும் சரி

Answer: c

 

19. Which of the following is not a correct pair?

a) Ellora caves – Rashtrakutas
b) Mamallapuram – Narasimhavarma -1
c) Elephanta caves – Ashoka
d) Pattadakal – Chalukyas

கீழ்க்காண்பனவற்றில் எது சரியான இணையில்லை

a) எல்லோரா குகைகள் – ராஷ்டிரகூடர்கள்
b) மாமல்லபுரம் – முதலாம் நரசிம்மவர்மன்
c) எலிபெண்டா குகைகள் – அசோகர்
d) பட்டடக்கல் – சாளுக்கியர்கள்

Answer: c

 

20. Find out the wrong pair.

a) Dandin – Dasakumara Charitam
b) Vatsyaya – Bharathavenba
c) Bharavi – Kiratarjuneeyam
d) Amogavarsha – Kavirajamarga

தவறான இணையைக் கண்டறியவும்.

a) தந்தின் – தசகுமார சரிதம்
b) வாத்ஸ்யாயர் – பாரத வெண்பா
c) பாரவி – கிரதார்ஜூனியம்
d) அமோகவர்ஷர்- கவிராஜமார்க்கம்

Answer: b

 

21.——– defeated Harsha Vardhana on the banks of the river Narmada.

a) Puli Keshi -1
b) Puli Keshi – 2
c) Nandi varma
d) Mahendira varma

——— ஹர்ஷவர்தனரை நர்மதை ஆற்றின் கரையில் தோற்கடித்தார்.

a) முதலாம் புலிகேசி
b) 2-ம் புலிகேசி
c) நந்திவர்மன்
d) மகேந்திரவர்மன்

Answer: b

 

22. ——— destroyed Vatapi and assumed the title VatapiKondan.

a) Narasimma varman – 2
b) Maha Vishnu
c) Pulikeshi – 2
d) Narasimma varman – 1

——- வாதாபியை அழித்து வாதாபி கொண்டான் எனப் பட்டம் சூட்டிக் கொண்டார்.

a) இரண்டாம் நரசிம்மவர்மன்
b) மகாவிஷ்ணு
c) 2-ம் புலிகேசி
d) முதலாம் நரசிம்மவர்மன்

Answer: d

 

23. ——- was the author of Aihole Inscription.

a) Keerthivarma
b) Rudrachirya
c) Ravi Keerthi
d) Bharavi

அய்கோல் கல்வெட்டின் ஆசிரியர் —– ஆவார்.

a) கீர்த்திவர்மன்
b) உருத்திராசாரியார்
c) ரவி கீர்த்தி
d) பாரவி

Answer: c

 

24. ——- was the army general of Narasimhavarma -1

a) Kushroo
b) Jina sena
c) Paranjothi
d) Hari kesari

——- முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதியாவார்.

a) குஸ்ரூ
b) ஜினசேனா
c) பரஞ்ஜோதி
d) அரிகேசரி

Answer: c

 

25. The music inscriptions in —– and —– show Pallavas interest in music.

a) Kudumiyanmalai, Thirumayam
b) Uttaramerur, Pudukottai
c) Aathichanallur, Keeladi
d) Vaikunda Perumal temple, Kailasanatha temple

——-,——- ஆகிய இடங்களில் உள்ள இசைக் கல்வெட்டுக்கள் பல்லவர்களின் இசையார்வத்தை உணர்த்துகின்றன.

a) குடுமியான்மலை, திருமயம்
b) உத்திரமேரூர், புதுக்கோட்டை
c) ஆதிச்சநல்லூர், கீழடி
d) வைகுண்ட பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில்

Answer: a

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *