அடைமொழியால் குறிப்பிடப்படும் சான்றோர்கள் பொதுத்தமிழ் தேர்வு1

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  அடைமொழியால் குறிப்பிடப்படும் சான்றோர்கள் பொதுத்தமிழ் தேர்வு1 கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 50 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

 

 

அடைமொழியால் குறிப்பிடப்படும் சான்றோர்கள் பொதுத்தமிழ் தேர்வு1

 

 

 

அடைமொழியால் குறிப்பிடப்படும் சான்றோர்கள் பொதுத்தமிழ் தேர்வு1

1. உரைவித்தகர் என அழைக்கப்படுபவர்?

அ)ராஜப்பா 

ஆ)வெங்கடாச்சலம் பிள்ளை

இ)வீரராசு முதலியார்

ஈ)பெரியவாச்சான் பிள்ளை

விடை: ஈ

2. புதுக்கவிதையின் புரவலர்?

அ) ஈரோடு தமிழன்பன்

ஆ) ந. பிச்சை மூர்த்தி

இ) தருமுசிவராமு

ஈ) சி.சு.செல்லப்பா

விடை: ஈ

3. தமிழ்நாட்டின் மாப்பசான்?

அ) அரசஞ்சண்முகனார்

ஆ) அனுத்தமா

இ) செய்குத் தம்பியார்

ஈ) ஜெயகாந்தன்

விடை: ஈ

4.சிற்றம்பலக் கவிராயர் என அழைக்கப்படுபவர் யார்?

அ) சிதம்பர ரகுநாதன்

ஆ) அரங்க சீனிவாசன்

இ) பாபநாசம் சிவன்

ஈ) வீர கவிராயர்

விடை: அ

5. பண்டிதமணி என்று அழைக்கப்படுபவர்?

அ) திரு.வி. கல்யாண சுந்தரனார்

ஆ) மு. கதிரேச செட்டியார்

இ) ரா.பி.சேதுப்பிள்ளை

ஈ) வள்ளலார்

விடை: ஆ

6. தென்னிந்தியாவின் சீர்திருத்த தந்தை எனப்படுபவர்?

அ) திருவெண்காடர்

ஆ) தாதாசாகிப் பால்கே

இ) அயோத்திதாசர்

ஈ) அண்ணாமலை செட்டியார்

விடை: இ

7. தமிழ்த்தாத்தா எனப்படுபவர்?

அ) திரு.வி.க

ஆ) உ.வே.சா

இ) கவிமணி

ஈ) பாரதியார்

விடை: ஆ

8.பரம்பிற் கோமான் என்று அழைக்கப்படுபவர்?

அ) அதியமான்

ஆ) காரி

இ) பாரி

ஈ) குமணன்

விடை: இ

9. கவி சக்கரவர்த்தி எனப்படுபவர்?

அ) கம்பர்

ஆ) சேக்கிழார்

இ) கபிலர்

ஈ) திருவள்ளுவர்

விடை: அ

10. நாமக்கல் கவிஞர் எனப்படுபவர்?

அ) வெ.இராமலிங்கம் பிள்ளை

ஆ) பாரதிதாசன்

இ) வள்ளலார்

ஈ) தேசிய விநாயகம் பிள்ளை

விடை: அ

11. சொல்லின் செல்வர் எனப்படுபவர்?

அ) அறிஞர் அண்ணா

ஆ) மு. வரதராசனார்

இ) ரா.பி.சேதுப்பிள்ளை

ஈ) தேவநேயப் பாவாணர்

விடை: இ

12. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனப்படுபவர்?

அ) ஆண்டாள்

ஆ) திலகவதியார்

இ) மங்கையர்க்கரசி

ஈ) அவ்வையார்

விடை: அ

13. தெய்வப்புலவர் எனப்படுபவர்?

அ) அகத்தியர்

ஆ) தொல்காப்பியர்

இ) பரிமேலழகர்

ஈ) திருவள்ளுவர்

விடை: ஈ

14. கல்வியில் பெரியன் எனப்படுபவர்?

அ) கம்பர்

ஆ) திருவள்ளுவர்

இ) இளங்கோவடிகள்

ஈ) சேக்கிழார்

விடை: அ

15. உத்தம சோழ பல்லவராயன் எனப்படுபவர் யார்?

அ) சுந்தரர்

ஆ) மாணிக்கவாசகர்

இ) அப்பர்

ஈ) சேக்கிழார்

விடை: ஈ

16. செந்நாப்போதார் எனப்படுபவர்?

அ) திருவள்ளுவர்

ஆ) கம்பர்

இ) சீத்தலை சாத்தனார்

ஈ) இளங்கோவடிகள்

விடை: அ

17. வேதம் தமிழ் செய்த மாறன் எனப் போற்றப்படும் நபர் யார்?

அ) தாயுமானவர்

ஆ) திருமங்கை ஆழ்வார்

இ) நம்மாழ்வார்

ஈ) குமரகுருபரர்

விடை: இ

18. பாவலரேறு என்று அழைக்கப்படுபவர்?

அ) சீத்தலை சாத்தனார்

ஆ) பெருஞ்சித்திரனார்

இ) தேவநேய பாவணர்

ஈ) சோமசுந்தர பாரதியார்

விடை: ஆ

19. சிந்துக்கு தந்தை எனப்படுபவர்?

அ) பாரதியார்

ஆ) கவிமணி

இ) பாரதிதாசன்

ஈ) வாணிதாசன்

விடை: அ

20. அப்பர் எனப்படுபவர்?

அ) மாணிக்கவாசகர்

ஆ) திருநாவுக்கரசர்

இ) திருஞானசம்பந்தர்

ஈ) சுந்தரர்

விடை: ஆ

21. வள்ளலார் எனப்படுபவர்?

அ) காந்தியடிகள்

ஆ) இராமலிங்க அடிகள்

இ) இளங்கோவடிகள்

ஈ) மு.மேத்தா

விடை: ஆ

22. பன்மொழிப்புலவர் என்பவர் யார்?

அ) ராஜாஜி

ஆ) அழ. வள்ளியப்பா

இ) அறிஞர் அண்ணா

ஈ) அப்பாதுரை

விடை: ஈ

23. பாவேந்தர் எனப்படுபவர்?

அ) பாரதியார்

ஆ) காளிதாசன்

இ) பாரதிதாசன்

ஈ) வாணிதாசன்

விடை: இ

24. அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்தவன்?

அ) அதியமான்

ஆ) வல்வில் ஓரி

இ) ராஜராஜன்

ஈ) பாரி

விடை: அ

25. முதற்பாவலர் எனப்படுபவர்?

அ) ஒட்டக்கூத்தர்

ஆ) திருவள்ளுவர்

இ) நல்லாதனார்

ஈ) மூன்றுறை அரையனார்

விடை: ஆ

26. சிலம்பு செல்வர் எனப்படுபவர் யார்?

அ) ராஜாஜி

ஆ) கல்கி

இ) தாயுமானவர்

ஈ) ம.பொ.சிவஞானம்

விடை: ஈ

27. கவிமணி எனப்படுபவர்?

அ) பாரதியார்

ஆ) தேசிக விநாயகம் பிள்ளை

இ) பாரதிதாசன்

ஈ) நாமக்கல் கவிஞர்

விடை: ஆ

28. புரட்சிக்கவிஞர் எனப்படுபவர்?

அ) பாரதியார்

ஆ) காளிதாசன்

இ) இளங்கோவடிகள்

ஈ) பாரதிதாசன்

விடை: ஈ

29. கிறிஸ்துவ கம்பர் எனப்படுபவர்?

அ) எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை

ஆ) கண்ணதாசன்

இ) வாணிதாசன்

ஈ) வீரமாமுனிவர்

விடை: அ

30. நம்பியாரூரன் எனப்படுபவர்?

அ) ஞானசம்பந்தர்

ஆ) திருநாவுக்கரசர்

இ) மாணிக்கவாசகர்

ஈ) சுந்தரர்

விடை: ஈ

31. மகாகவி எனப்படுபவர்?

அ) கண்ணதாசன்

ஆ) வாணிதாசன்

இ) பாரதியார்

ஈ) பாரதிதாசன்

விடை: இ

32. செக்கிழுத்த செம்மல் எனப்படுபவர்?

அ) கண்ணதாசன்

ஆ) பாரதியார்

இ) அறிஞர் அண்ணா

ஈ) வ.உ.சி சிதம்பரம் பிள்ளை

விடை: ஈ

33. நரை முடித்துச் சொல்லால் முறை செய்த அரசர் யார்?

அ) குலோத்துங்கச் சோழன்

ஆ) மனுநீதிச் சோழன்

இ) ராஜராஜ சோழன்

ஈ) கரிகாலச்சோழன்

விடை: ஈ

34. மாதானுபங்கி எனப்படுபவர்?

அ) சீத்தலை சாத்தனார்

ஆ) கம்பர்

இ) இளங்கோவடிகள்

ஈ) திருவள்ளுவர்

விடை: ஈ

35. மௌனகுரு யார் மரபில் வந்தவர் ?

அ) திருமூலர்

ஆ) திருநாவுக்கரசர்

இ) சுந்தரர்

ஈ) தாயுமானவர்

விடை: அ

36. வான்புகழ் கொண்ட பெருந்தகையார் எனப்படுபவர்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சேக்கிழார்

ஈ) திருவள்ளுவர்

விடை: ஈ

37. இயற்கை தத்துவ அறிஞர் எனப்படுவர்?

அ) பாரதிதாசன்

ஆ) பாரதியார்

இ) தாகூர்

ஈ) ஸ்ரீ அரவிந்தர்

விடை: இ

38. ‘புலனழுக்கற்ற அந்தணாளன்’ என்று புகழப்பட்டவர் யார்?

அ) அவ்வையார்

ஆ) கம்பர்

இ) பரணர்

ஈ) கபிலர்

விடை: ஈ

39. குறுமுனி என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?

அ) புத்தர்

ஆ) தொல்காப்பியர்

இ) திருமூலர்

ஈ) அகத்தியர்

விடை: ஈ

40. முத்தமிழ் காவலர் எனப்படுபவர்?

அ) கண்ணதாசன்

ஆ) அவ்வையார்

இ) வேதநாயகம் பிள்ளை

ஈ) கி.ஆ.பெ.விசுவநாதம்

விடை: ஈ

41. வரலாற்றுக் குறிப்புகளை பாடலினுள் பொதித்து வைத்து பாடுவதில் வல்லவர் யார்?

அ) கம்பர்

ஆ) கபிலர்

இ) பரணர்

ஈ) அவ்வையார்

விடை: இ

42. உவமைக்கவிஞர் எனப்படுபவர்?

அ) திரு.வி.க

ஆ) பாரதிதாசன்

இ) பாரதியார்

ஈ) சுரதா

விடை: ஈ

43. கான மஞ்சைக்கு கலிங்கம் நல்கிய புகழுக்குரியவன் யார்?

அ) அதியமான்

ஆ) பேகன்

இ) பாரி

ஈ) வல்வில் ஓரி

விடை: ஆ

44. பசித்திரு தனித்திரு விழித்திரு என்னும் தாரக மந்திரத்தை முதன் முதலில் மக்களுக்கு போதித்தவர் யார்?

அ) ராமலிங்க அடிகள்

ஆ) பாரதியார்

இ) கண்ணதாசன்

ஈ) கம்பர்

விடை: அ

45. தொண்டர்சீர் பரவுவார் எனப்படுபவர்?

அ) கம்பர்

ஆ) சேக்கிழார்

இ) திருநாவுக்கரசர்

ஈ) திருவள்ளுவர்

விடை: ஆ

46. ‘மொழிஞாயிறு’ எனப்படுபவர்?

அ) பாரதிதாசன்

ஆ) திரு.வி.கல்யாண சுந்தரனார்

இ) தேவநேயப் பாவாணர்

ஈ) மறைமலை அடிகள்

விடை: இ

47. ‘தம்பிரான் தோழர்’ எனப்படுபவர்?

அ) சுந்தரர்

ஆ) ராமானுஜர்

இ) அப்பர்

ஈ) மாணிக்கவாசகர்

விடை: அ

48. குழந்தைக் கவிஞர் எனப்படுவர்?

அ) வைரமுத்து

ஆ) கண்ணதாசன்

இ) தமிழண்ணல்

ஈ) அழ.வள்ளியப்பா

விடை: ஈ

49. ‘சொல்லின் செல்வன்’ என்று அழைக்கப்படுபவர்?

அ) அங்கதன்

ஆ) சுக்ரீவன்

இ) வாலி

ஈ) அனுமன்

விடை: ஈ

50. தமிழ்தென்றல் எனப்படுபவர்?

அ) நாமக்கல் கவிஞர்

ஆ) கவிமணி

இ) திரு.வி.க

ஈ) உ.வே.சாமிநாதன்

விடை: இ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *